மீஞ்சூர் ஒன்றியம், காட்டுப்பள்ளி அரசு பள்ளி மாணவர்களுக்கு அதானி அறக்கட்டளை சார்பில், சைக்கிள்கள் வழங்கப்பட்டது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சார்பில், விலையுயர்ந்த மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
காட்டுப்பள்ளி, தாங்கல் பெரும்புலம், காட்டூர், திருவெள்ளைவாயல், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 300 பேருக்கு 300 மிதிவண்டிகள் வழங்க அதானி குழுமம் சார்பில் திட்டமிடப்பட்டு, இதன் முதல் கட்டமாக சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி காட்டுப்பள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வேல்முருகன், கிராம நிர்வாகிகள் கணபதி, ராஜா, பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 31 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சமுதாய நலப் பணித் திட்ட குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். மீஞ்சூர் ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர் சாந்தி, உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ராஜா மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777