November 25, 2020

சோழவரம் ஒன்றியம், ஆண்டார் குப்பம் ஊராட்சியில், மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது…

1 min read

சோழவரம் ஒன்றியம், ஆண்டார் குப்பம் ஊராட்சியில், மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

ஆண்டார் குப்பம் ஊராட்சியில், நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகளை, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆய்வு செய்தார். மேலும், ஆண்டார் குப்பம் ஊராட்சி மக்களுக்கு நலதிட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் வாயிலாக, முதியோர் உதவி தொகை, புதிய ரேசன் கார்டுகள், வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட பல நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியை ஆண்டார் குப்பம் அதிமுக ஊராட்சி செயலாளரும், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான மதி ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம், இளைஞரணி துணைசெயலார் பஞ்செட்டி நடராஜன், மாவட்ட மணவரணி செயலாளர ராக்கேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பானுபிரசாத், பொது குழு உறுப்பினர் பொன்னுதுரை, ஏ.கே.ஏஸ் சுதாகர், மற்றும் ஆண்டார் குப்பத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சுரேஷ், தமிழ் தயா, ஹேமகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *