November 25, 2020

பூண்டி ஒன்றியம், மோவூர் ஊராட்சியில் சுடுகாட்டிற்க்கு பாதை இல்லாத்தால், மக்கள் அவதி…

1 min read

திருவள்ளுர் மாவட்டம்,
பூண்டி ஒன்றியம், மோவூர் ஊராட்சியில் அடங்கிய, தோப்பு கண்டிகை பகுதியில், சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.

அந்த தோப்பு கண்டிகை பகுதிக்கு என்று, அப்பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் சுடுகாடு உள்ளது. ஆனால், அப்பகுதி மக்களில் யாரேனும் இறந்து போனால் அவர்களுடைய உடலை அந்த சுடுகாட்டிற்க்கு கொண்டு செல்வதற்க்கு வழி இல்லாததல், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த சுடுகாட்டு பாதையின் இடையே, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இறந்தவர் உடலை அடக்கம் செய்ய அந்த விளைநிலத்தின் வழியே செல்வதால், பல நேரங்களில் தகராறுகளும் ஏற்ப்பட்டுள்ளது.

இந் நிலையில், தற்போது தோப்பு கண்டிகையை சேர்ந்த ஏழுமலை என்பவர் உடல்நிலை குறைவால் இறந்து போன நிலையில், அவருடைய உடலை அடக்கம் செய்ய அவருடைய உறவினர்களும், அப்பகுதி மக்களும் சுடுகாட்டிற்க்கு பாதை இல்லாததால், சிறிது தூரம் வயல்வெளியில் இறங்கி இறந்தவர் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதனால் அப்குதியில் தகராறுகள் ஏற்படும் பதட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டது.

இது குறித்து, மோவூர் ஊராட்சிமன்ற தலைவர் கூறுகையில், தோப்பு கண்டிகை பகுதி சுடுகாட்டிற்க்கு பாதை உள்ளது. ஆனால் இடையே சிறிது தூரம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் இடையில் உள்ளதால், சுடுகாட்டு பாதை தடைபடுகிறது. ஆனால், நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்த பிரட்சனையை தீர்க்கவேண்டி, தாசில்தாரிடம் மனு கொடுத்து இருக்கிறேன். அவர்களும் வந்து அந்த பாதையை அளந்து கொடுப்பதாக கூறி இருந்தனர். ஆனால், இந்த கொரோனா கால பிரட்சனையால் அந்த பாதையை அளவிடும் பணி தள்ளி போய் உள்ளது. என கூறினார்.

செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *