November 25, 2020

சென்னைக்கு, குடிநீர் வழங்கும், பிரதான ஏரிகளில் ஒன்றான, புழல்ஏரியை சீரமைக்க நாமும் உதவலாமே…

1 min read

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் ஏரிகளில் மிக முக்கியமானது புழல் ஏரி, இந்த ஏரிகரையின் மீது வளர்ந்து கிடக்கும். முள் செடிகளையும், குப்பை, கழிவுகளையும், கடந்த – 43- வாரங்களாக சமூக பணிக் குழுவினர், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, தொடர்ந்து சீர்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக, ஆல்ஃபா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு, இன்று காலை, தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக சுவார்ட் அமைப்பின் தன்னார்வலர்கள் சார்பாக, அதன் நிர்வாகிகளில் ஒருவரான, சகோதரர் அமீர் அவர்கள் நம்மிடம் கூறுகையில், ” நாங்கள் எங்கள் நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து பல வருடங்களாக இந்த பணியை செய்து வருகிறோம். அதில், பல குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுடன், இணைந்து நாங்கள் இந்த ஏரியை சீரமைக்கும் பணியில் செயல்பட்டு கொண்டு வருகிறோம், நமது வருங்கால, சந்ததியினருக்காக, நாம் இப் பணியை தொய்வின்றி, செய்து வருகிறோம், என்பது எங்கள் அனைவருக்கும் மிகவும் மன நிறைவைத் தருகிறது.

சமீப காலமாக, தன்னார்வலர்கள் பலர் எங்களுடன் இணைந்து, அக்கறையோடு இதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது, மிகவும் பெருமைக்குரிய தகவல். மேலும் இப்பணியை மேலும் சிறப்பாக செயல்படுத்த, தகுந்தாற் போல் சில அத்தியாவசியமான உபகரணங்களும் தேவைப்படுகிறது, என்பதை கேள்விபட்ட பாடியநல்லூர் லைன்ஸ் கிளப்பின்
செயலாளர் சகோதரர் சண்முக சுந்தரம் அவர்கள், மரம் வெட்டும் இயந்திரம் ஒன்றை அவர் சார்பாக, வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த மகத்தான பணிக்காக தங்களது பொன்னான காலத்தை ஒதுக்கி, ஒவ்வொரு வாரமும் எங்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், சமூக பணிக் குழுவின் சார்பாக, நன்றியை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பாக, இன்று இந்த சமூக பணியில் தங்களை, ஈடுபடுத்திக்கொண்ட, அனைத்து நல், உள்ளங்களுக்கும், பாடியநல்லூர் லைன்ஸ் கிளப் சார்பாக சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. என கூறினார். மேலும், அவர் கூறுகையில்,
” நீங்களும் எங்களுடன் இணைந்து புழல் ஏரியின், தூய்மைப் பணியில், உங்களை இணைத்துக் கொள்ள விரும்பினால், வரும் வாரங்களில் எங்களுடன் இணைந்து சேவை செய்ய, உங்களை, மகிழ்ச்சியுடன், வரவேற்கிறோம்,” என்றார்.

சமூக பணிக்குழு வை
தொடர்பு கொள்ள,
9362222786
www.swott.in இந்த அமைப்பை பற்றி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள…. ⬇️

https://www.facebook.com/swottngo/

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *