November 25, 2020

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், தச்சூரில் நடந்தது…

1 min read

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் தச்சூர் கூட்டு சாலையில் உள்ள எல்.கே.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டக் அவைத்தலைவர் மு.பகலவன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றும் போது திமுக 2021ல் ஆட்சி அமைக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதிகளை வெல்ல திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்முடிப்பூண்டி கி.வேணு, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் க.சுந்தரம், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி , சட்டத் துறை செயலாளர் இரா.கிரிராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் மேலும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், டாக்டர் பரிமளம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொது குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், அபிராமி குமரவேல், ராமமூர்த்தி, சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், ரமேஷ்ராஜ், சுகுமாறன், சக்திவேல், சந்திரசேகர், முன்னாள் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் நிலவழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதா முத்துசாமி, ஊராட்சி தலைவர் மாதர்பாக்கம் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன் மற்றும் திமுகவின் பல்வேறு அணி நிர்வாகிககள், ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நவம்பர் 21,22 டிசம்பர் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் சேர்த்தல் முகாம்களில் அந்தந்த வாக்குச் சாவடிகளில் திமுக பாக முகவர்கள் சென்று 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. கூட்ட முடிவில் சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் நன்றி கூறினார்.

செய்தியாளர் – சுடர்மதி நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *