November 28, 2020

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி, மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை துவங்கியதன் காரணமாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக தற்போது அங்கு தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது மேலும் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அடைப்பட்ட நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதனை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர் பொன்னையா மாவட்டத்தில் 538 ஏரிகள் புனரமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும். இதில் தற்போது 62 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாகவும். இதுவரை ஏரிகள் உடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அனைத்து ஏரிகளையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளதாகவும். பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும். பொன்னேரி பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட முறைகேடு தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும். விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து பவுண்டரிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம், தாசில்தார் மணிகண்டன், மற்றும் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, அத்திபட்டு தலைவர் சுகந்தி வடிவேலு, துணைத்தலைவர் வடிவேலு ஆகியோர் உடன் இருந்தனர். இதற்க்கிடையே, மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை முழுமையாக பார்வை விடாமலும், தங்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்காமல் ஆட்சியர் சென்றதாக கூறி, ஒரு சில பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *