November 25, 2020

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் தற்போது இருப்பு, 8 மாதங்களுக்கு தேவையை பூர்த்தி செய்யும் என, தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்தார்…

1 min read

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 வதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது.

அது தற்போது முடிவுற்ற நிலையில், அதனை வரும் 21-ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்க உள்ளார். இதற்காக சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் கண்ணன் கோட்டை நீர் தேக்கத்தில் ஆய்வு செய்தார். அப்போது முடிவுற்ற பணிகளை அவர் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறிய போது, சென்னையின் குடிநீர் தேவைக்காக 5-வது நீர் தேக்கமாக இந்த கண்ணன் கோட்டை அமையும் என்றும், இதில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்றும், மழைநீர் மற்றும் ஆந்திராவில் இருந்து வரக்கூடிய தண்ணீரை முழுமையாக சேகரித்து வைக்க முடியும் என்றும், தற்போது இந்த ஏரியில் 132 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், நாள்தோறும் இங்கிருந்து 65 மில்லியன் லிட்டர் சென்னைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்திவித்தார்.

மேலும், சென்னையின் குடிநீர் ஆதாரங்கள் 65 சதவீதம் நிரம்பியுள்ளதால், 8 மாதங்களுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், இந்த கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். கடந்த 2 நாட்களில் பெய்த மழை காரணமாக சென்னை மண்டலத்தில் உள்ள 4000 ஏரிகளில் 25% நிரம்பி உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முதையா, கண்ணன் கோட்டை நீர்தேக்க திட்ட செயற்பொறியாளர் தில்லைகரசி, ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *