November 27, 2020

சென்னையில், காவல் துறையின் சார்பில், திருநங்கைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

1 min read

பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சென்னையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில், நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டலம் மூலமாக நடந்த இந்த நிகழ்ச்சி, எழும்பூர், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் அலுவலகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது. சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையாளர் சுதாகர், அவர்கள் கலந்து கொண்டு திருநங்கைகள் சுய தொழில் புரிய 6 தையல் இயந்திரங்கள், 4 கேஸ் ஸ்டவ்கள், சமையல் செய்ய பயன்படும் உபகரணங்கள், பெட்டிக்கடைக்கு தேவையான பொருட்கள், 6 தள்ளுவண்டிகள், திருநங்கைகள் சமூக அலுவலகங்களை நிர்வாகம் செய்ய 10 கணிணிகள் மற்றும சமூக பணியில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளுக்கு 4 லேப்டாப்கள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையாளர் P.சாமிநாதன் அவர்கள், சூளைமேடு F 5 காவல் நிலைய ஆய்வாளர் G . ஆனந்த் பாபு அவர்கள் மற்றும் இதர காவலர்கள் திருநங்கை அமைப்புகளை சேர்ந்த நூரி அம்மா உட்பட நிர்வாகிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து நலதிட்ட உதவிகளை பெற்று கொண்டனர்.

செய்திகள் – கழுகு ரிப்போட்டர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *