திருவள்ளுர் மாவட்டத்தில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் செயலியை, எஸ்.பி. அரவிந்தன் அறிமுகபடுத்தினார்…
1 min read
போலிசார் சந்தேகம்படும் நபர்களின்
முகத்தை படம் பிடித்தால், அதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் விதமான ” ஃபேஸ் ட்ரேகர் ” என்ற செயலியை திருவள்ளூரில் எஸ்பி அரவிந்தன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா, செம்மரக்கடத்தல், ஆள் கடத்தல் என பல்வேறு விதமான குற்றங்களை செய்து தண்டனை பெற்றும், தண்டனை பெறாமல் தப்பி ஓடியவர்கள் என குற்றாவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் என திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் உறுதிப்பட தெரிவிக்கிறார்.
அதற்கான செயலி மூலம் 100 சதவீதம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அன்னிய நபர்கள் மற்றும் ஏற்கனவே குற்றச் செயல் புரிந்த நபர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காவல் துறையினர் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது சந்தேகப்படும்படியான நபர்களை படம் பிடித்து அவர்களின் புகைப்படங்களை முக அடையாளம் காணும் புதிய செயலியை ஒப்பிடும் போது ஏற்கனவே குற்றம் செய்த நபரின் முகம் அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து குற்றம் புரிந்தவர் அடையாளம் காணப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.

திருவள்ளுர்
மாவட்டத்திலுள்ள 80 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என காவல் துறையினர் அனைவரிடமும் செல்போன்களில் இந்த செயலி நிறுவப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, பாண்டிச்சேரி மாநிலங்களின் குற்றவாளிகளின் விவரத்தையும் இந்த செயலி மூலம் கண்டறியும் வகையில் அவை நிறுவப்பட்டுள்ளன .2012 முதல் மாநில குற்ற ஆவண காப்பகம் மூலம் தகவல்கள் பெறப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1400 குற்றவாளிகளின் விவரங்கள், தமிழகம் முழுவதும் மொத்தம் 60 ஆயிரம் குற்றவாளிகளின் விவரங்கள் இதில் இருப்பதால், பழைய குற்றவாளிகளை எளிதில் இந்த செயலின் மூலம் கண்டறிய முடியும் என்கிறார்.

முதன்முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டையில் இந்த செயலியின் மூலம் பழைய குற்றவாளியை வாகன தணிக்கையின் போது முக அடையாளங்களுடன் ஒப்பிட்டு கைது செய்துள்ளதாக எஸ் பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியான நபர்களை புகைப்படமெடுத்து எடுத்தால், அதில் 80 சதவீதம் முக அடையாளங்கள் ஒத்துப்போனால் அவர் செய்த குற்றங்களின் பின்னணி, அந்த செயலியில் வந்து விடுகிறது. இதனைக் கொண்டு எந்த பழைய குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்கள் என முழுமையாக கண்டறிந்து, அதற்கான நடவடிக்கை எடுக்க இந்த செயலி பயன்படுகிறது.

இந்த செயலியை திறம்பட செயல்படுத்தியற்காக எஸ்பி அரவிந்தன் அவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
முகத்தை படம் பிடித்தாலே, குற்றவாளிகளை அடையாளம் காணும் இந்த செயலி முழுமையாக செயல்படுத்தப்பட்டால் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் குற்றமற்ற மாநிலமாக மாற்றிட முடியும், என மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த செயலியின் பயன்பாட்டை எதிர்பார்கிறார்கள்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777