திருகுவளையில், 100 நாள் தேர்தல் பரப்புரை துவங்கிய, திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது…
1 min read
திமுக இளைஞர் அணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் மே மாதம் வரை 100 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார்.
தடையை மீறி திருக்குவளையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், மரியாதை செலுத்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

திருக்குவளையில் உள்ள கலைஞர் வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட மேடையில் தொண்டர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, நமது தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்பார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு புகட்டிய பாடத்தை மீண்டும் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்றார். இதை தொடர்ந்து தடையை மீறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாக உதயஸ்டாலின் மற்றும் அவருடன் பங்கேற்ற திமுக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், நாகை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.


இந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டு தீ போல பரவியதால், அனைத்து பகுதிகளிலும் திமுக வினர், உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து ஆர்ப்பாடங்களும், போராட்டங்களும் செய்து வருகின்றனர்.

திருவள்ளுர் வடக்கு மாவட்ட பொருப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் மற்றும் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆகியோர் மேலூர் கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதே போல் திருவள்ளுர் தெற்கு மாவட்ட பொருப்பாளர் ஆவடி சா.மு.நாசர் ஆவடியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.



திருவள்ளுரில், திருவள்ளுர் எம்.எல்.ஏ, வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.




திருவள்ளூர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் டி.வி.இளங்கோவன் தலைமையில் பொன்னேரி பேரூர் இளைஞரணி சார்பாக, பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்



செய்தியாளர் – மகேஷ், சுடர்மதி, சீனிவாசன் நிழல்.இன் – 8939476777