மணலி புது நகர் அருகே, இடையன்சாவடி பகுதியில், சீன நாட்டின் மருந்து கழிவுகள் கொட்டபடுவதால்,பொது மக்கள் அச்சம்…
1 min read
சென்னை மணலி புது நகர் இடையஞ்சாவடி பகுதியில், காலி இடத்தில், சீன நாட்டின், காலவதியான மாத்திரைகளுடன் கூடிய அட்டைகள், மருந்து கழிவுகள் ஆகியவற்றை கொட்டி வைத்துள்ளனர், இதில் இருந்து வெளியேறும் நாற்றம், பொது மக்களின் உடல் நிலைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது, இந்த கழிவுகள் அனைத்தும், காயலாங்கடை ஒன்றில் இருந்து , இங்கு கொட்டப்பட்டுள்ளது,

மேலும், இந்த கழிவுகளை அடையாளம் தெரியாத சிலர் அடிக்கடி எரிப்பதால், அதில் இருந்து வெளியேறும் புகைகள், பொது மக்களுக்கு , பல்வேறு பிரச்சினைகளை தருகிறது, மேலும், இந்த கழிவுகள், இங்கு கொட்டப்பட்டு இருப்பதை , சில அதிகாரிகள் கண்டுக்கொள்ளவது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர், உடனடியாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இந்த கழிவுகளை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777
