வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றர், பூந்தமல்லி எம்.எல்.ஏ, வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினார்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் கிராமத்தில் வசித்தில் வசித்து வருபவர் சேகர், இவர் கால் இழந்த கூலித் தொழிலாளி ஆவார். அவருடைய மனைவி பூபதி பெரியபாளையத்தில் உள்ள கோவிலில் செக்யூரிட்டியாக பணி புரிந்து வருகிறார்.
இவர்களுடைய இளைய மகள் சாருமதி(வயது18). இவர் நீட் தேர்வில் 367 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பட்டியலில் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், இந்த மாணவி செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இதனால் வெங்கல் கிராமத்தில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் திரைப்பட கலை இயக்குனர் கதிர் கல்லூரி கட்டணமான ரூ.13,610-யை செலுத்தினார். அத்துடன் ஐந்தரை ஆண்டுகள் இந்த மாணவி கல்வி பயில கல்வி கட்டணத்தை செலுத்துவதாக உறுதி அளித்துள்ளார். மேலும், இம்மாணவிக்கு புத்தகங்கள், மெஸ் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்துவதற்கு இவரது குடும்பம் மிகவும் கடினமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியானது.

இதனை அறிந்த, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி இம்மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று நீட் தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர், கல்வி கட்டணத்தை செலுத்திய அறக்கட்டளை தலைவர் கதிர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பின்னர், சாருமதியின் கல்வி செலவுக்கு தேவையான உதவிகளை கோரிக்கை வைத்தாள் செய்து கொடுப்பதாக உறுதி கூறினார். இந்நிகழ்ச்சியின்போது, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேலு, ஒன்றிய அவைத்தலைவர் பாஸ்கர், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் கோடுவெளி குமார், ஊராட்சி செயலாளர் நாகலிங்கம், மாவட்ட மாணவர் அணியை சேர்ந்த டேவிட், ரஜினி, அக்கறை ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சீனிவாசன் நிழல்.இன் – 8939476777