January 28, 2021

சென்னை மணலி புதுநகர், அய்யா, வைகுண்ட தர்மபதியில், இலவச திருமண மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

1 min read

சென்னை மணலிபுதுநகர் வைகுண்ட புரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கோவில் அண்ண மண்டப கட்டடத்தின் முதல் தளத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட இலவச திருமண மண்டபம் கட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கோவில் நிர்வாகிகள் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், தென் சென்னை மாவட்ட தா.மா.க தலைவர் கொட்டிவாக்கம் ஏ.முருகன் நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், முன்னாள் மெர்க்கண்டைல் வங்கி இயக்குனர் ராஜ்குமார், ஆகியோர் மேள தாளங்கள் முழங்க பதியில் இருந்து அடிக்கற்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக அண்ண மண்டப முதல் தளத்திற்கு கொண்டு சென்றனர். பின் ‘அய்யா உண்டு’ என்ற திருநாம உச்சரிப்புடன் அடிக்கல் நாட்டப்பட்டது .

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *