May 13, 2021

திருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்…

1 min read

திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதியில், ஆவடி மாநகரம், 9வது வட்டத்திற்கு உட்பட்ட மணிகண்டபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் அரபத் ஏரியிலிருந்து, குடியிருப்புகளில் வெள்ள நீர் உள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற திமுகவின், திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் அவர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்தார். அப்போது அவருடன் மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், வட்ட செயலாளர்கள் நாகராஜ், ராஜி, உதயகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

இன்று, கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் கீழ், நிவர் புயல் மழையினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் நரிகுறவர் மக்களுக்கு, திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் அவர்கள் உணவு வழங்கினார். அப்போது அவருடன் மாவட்ட அவைத்தலைவர் கே. திராவிடபக்தன் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மோ. ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், செயலாளர் வி. ராஜசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதேபோல், நிவர் புயல் மழையினால், எறையாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி முழுவதுமாக நிரம்பி உள்ளதை, திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு உபரி நீர் வெளியேறும் பகுதியினையும் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திமுகவின், சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்கள் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி பி.டி.மூர்த்தி நகர் பகுதியில், வீடுகளில் மழை நீர் புகுந்ததை தொடர்ந்து நேரடியாக வந்து பார்வையிட்டு, மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுத்தார். அவருடன் சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், ஒன்றிய துணை பெருந் தலைவருமான மீ.வே.கருணாகரன் கிளைக் கழக செயலாளர் தாமு, ஞானம், மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செங்குன்றம் காவல் துறையின் மூலம், நிகர் புயலால், பாதிக்கப்பட்டு இருப்பிடம் இல்லாமல் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்கள் மொட்டியம்மன் நகர் பகுதியில் இயங்கும் அன்னை பாரதமாத ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தார். அதில் சாலை ஓரங்களில் தங்கியிருந்த முதியோர்களை கொண்டு வந்து சேர்த்து தங்க வைத்தனர். போலிசாருக்கு உதவியாக செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக், சீனிவாசன், உள்ளிட்ட இளைஞர்கள் உதவியாக இருந்து, முதியோர்களை அந்த தற்காலிக முகாமிற்க்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

செய்தியாளர்கள் – மகேஷ், சீனிவாசன் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *