January 26, 2021

கும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…

1 min read

நிவர் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பப்பட்ட கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாநெல்லூர் பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். இதுகுறித்து மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ் சிவகுமாருக்கு தகவல் அளித்தார். உடனே, மாநெல்லூரில் பழங்குடியின மக்கள் வசித்து வந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே எம் எஸ் சிவகுமார் பழங்குடியின மக்களுக்கு தேவையான பாய் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.

மேலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகள் சேதம் அடைந்து இருந்தால் அதற்குரிய நிவாரணம் பெற்றுத் தரவும் வீடுகள் கட்டித் தரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று மக்களிடம் ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார் தெரிவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதே போல், ஆரம்பாக்கம் ஊராட்சி கணபதி நகரில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இது குறித்து ஆரம்பாக்கம் பகுதி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரவக்கிளி ஜெயராமன் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து, ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் அதிமுக மீனவரணி துணை செயலாளர் ஜெ.சுரேஷை தொடர்ப்பு கொண்டு மழை வெள்ளம் வெளியேற நடவடிக்கை எடுக்க கோரி அதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு நிகழ்விடத்தை பார்வையிட்டார்.

ஜெசிபி இயந்திரம் மூலம் கணபதி நகரில் மழை வெள்ளம் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே, கணபதி நகரை சூழ்ந்த மழை வெள்ளம் சிறிது சிறிதாக வெளியேறியது. புயல் மழை நேரத்தில் கணபதி நகரை சூழ்ந்த வெள்ள ஆபத்தை நீக்கிய ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரவக்கிளி ஜெயராமனுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

செய்திகள் – சுடர்மதி நிழல்.ஒன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *