கும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…
1 min read
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில், நிவர் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதியில் நிவர் புயலின் காரணமாக புதன்கிழமை 145மிமி மழை பெய்தது. அத்தோடு பலத்த காற்றும் வீசியது. இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மரங்கள் சாய்ந்தது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் வெள்ள நீரை அகற்ற உத்தவிட்டார். மேலும், புதுப்பேட்டை பகுதியில் இடிந்த வீட்டை பார்வையிட்ட எம்எல்ஏ வீட்டின் உரிமையாளருக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வதாக கூறினார். அப்போது, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், துணை தலைவர் எம்.எல்லப்பன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு, அதிமுக நிர்வாகிகள் மு.க.சேகர், சுகுமாறன், எம்.எஸ்.எஸ்.சரவணன், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உடனிருந்தனர்.

இதனால், டி.ஆர்.பி நகர் பகுதி மக்கள் புதன்கிழமை மாலை முதல் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். பெண்கள் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இது குறித்து அறிந்த, சித்தராஜகண்டிகை ஊராட்சி தலைவர் சி.எம்.ரேணுகா முரளி டி.ஆர்.பி நகர் விரைந்து பொதுமக்களை அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்து அனைவருக்கும் உணவு, குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை சித்தராஜகண்டிகை ஊராட்சியில் குடிநீர் வசதி ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ரேணுகா முரளி அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்து இருந்தார். இன்று மாலைக்குள் டி.ஆர்.பி நகரில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிகழ்வின் போது ஊராட்சி தலைவர் சி.எம்.ரேணுகா முரளி தெவித்தார்.

செய்திகள் – சுடர்மதி நிழல்.இன் – 8939476777
