பொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…
1 min read
நிகர் புயலின் பாதிப்பில் இருந்து பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராம மக்களை காப்பாற்ற வேண்டி, பழவேற்காட்டில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவிசய தேவைகளுக்கு உண்டான ஏற்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர், முத்துசாமி, பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், திருபாலைவனம் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர். அந்த பழவேற்காடு முகாமிற்க்கு, நேரில் சென்ற பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பி.பலராமன் முகாமை ஆய்வு செய்ததுடன், அங்கு தங்கியிருந்த மக்களுக்கு தேவையான பாய் தலையனை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதே போல், காட்டூர் குறு வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்தில், மேற்கூரை சேதம் அடைந்த நிலையில் உள்ள 350 வீடுகளுக்கு மேற்கூரையின் மேல் போடுவதற்க்கு, தார்பாய் வழங்கபட்டது. அதில், பொன்னேரி தாசில்தார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி, ஆகியோரின் முன்னிலையில் காட்டுப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சேதுராமன், துணை தலைவர் வினோத், மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பெற்று கொண்டு அதை மக்களுக்கு வழங்கப்பட்டது.


வேளப்பாக்கம் பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி நின்றதால், ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு அவர்கள் ஏற்ப்பாட்டின் பேரில், அப்பகுதி மக்கள் அனுப்பம்பட்டு உயர்நிலை பள்ளியில் அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் மீஞ்சூர் வருவாய் ஆய்வாளர் செந்தில் , ஆகியோர் செய்து வருகின்றனர்.

பழவேற்காடு ஊராட்சியில் உள்ள குளத்துமேட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை ஆண்டார்மடம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் உணவு தயார் செய்யப்பட்டு வழங்கபட்டது. மேலும் பழவேற்காடு ஊராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரை JCB இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. பசியாவரம் குப்பத்தில் தாழ்வான பகுதியில் இருந்த படகுகளை JCB மூலம் மேடான பகுதியில் வைக்கப்பட்டன.

கலைஞர் நகரில், மின்ஒயர் அறுந்து விழுந்ததை மின் ஊழியர்கள் மூலம் சரிசெய்யப்பட்டன. துணை தலைவர் பி.எல்.சி.ரவி. மற்றும் வார்டு உறுப்பினர்கள், அசினா அப்தூல்சமது, துராப்புதீ, ஹாருண்பாஷா, குமாரிகோபால், அப்தூல்முஜீப், ஜெய்சங்கர், நேதாஜி, ஆபிதா மற்றும் ஊராட்சி செயலாளர் பெ.கோபால் ஆகியோர் நேரடியாக இப் பணியில் ஈடுபட்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா, மில்டன் நிழல்.இன் – 8939476777
