May 13, 2021

பொன்னேரியில், திமுக இளைஞர் அணி சார்பில், குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்…

1 min read

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன் ஏற்பாட்டில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் 27ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பொருட்கள் பழங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திருவள்ளுர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.எஸ் கோவிந்தராசன் அவர்கள் குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்கினார்.மேலும் இந் நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாவட்ட துணைச் செயலார்கள் கோளுர் கதிரவன், பரிமளம், ஒன்றிய செயலாளர் சுகுமாரன் பேரூர் செயலாளர் விஸ்வநாதன், துணை அமைப்பாளர் ஆனந்த், லோகேஷ், மோகன்பாபு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன், திவாகர், மற்றும் திமுகவின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மிலடன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *