May 13, 2021

ஆரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்…

1 min read

திருவள்ளுர் மாவட்டம் ஆரணி அடுத்த மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்(வயது30) கூலி தொழிலாளியான இவர் இன்று மாலை ஆரணி பஜார் வீதிக்கு சென்று, பின்னர் தனது வீட்டிற்கு செல்ல ஆரணி ஆற்றில் நீந்திச் சென்று மங்களம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முயன்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ள நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்த மக்கள் கூக்குரலிட்டனர். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி காவல் துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பத், ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி வாலிபர் தேவராஜை உயிருடன் மீட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கி பெருவாயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்ற வாலிபர் இறந்த சம்பவம் மக்கள் மனதிலிருந்து மறைவதற்குள் இச்சம்பவம் நடைபெற்றது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *