May 13, 2021

பெரியபாளையம் அருகே, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தை குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மதுரவாசலில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிவர் நிறுவனத்திற்கு சொந்தமான லின்பாக்ஸ் லாஜிஸ்டிக் தனியார் நிறுவனத்தில் சோப்பு, டீதூள், உணவு
பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் பணியில் 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்,
அவர்களை உரிய காரணம் இன்றி பணி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து நிறுவன வாயிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள் ஹிந்துஸ்தான் லீவர் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும், தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த பெரியபாளையம் போலீசார் மற்றும் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தையின் மூலம் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் போக்குவரத்து சங்கத்தின் மாநில தலைவர் சுந்தர்ராஜன், சிஐடியு மாவட்ட தலைவர் விஜயன், சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் சம்பத், ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி, விவசாய சங்க தொழிலாளர்களின் வட்டச்செயலாளர் அருள் ஆகியோர் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *