May 13, 2021

கொரோனோ தொற்று காலத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா…

1 min read

முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் ஒரு கோயிலாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்மையான இந்த திருக்கோயிலில், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருவிழா, மலை கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆந்திர மாநிலம் மற்றும் அருகிலுள்ள ராணிப்பேட்டை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றி உள்ள அனைத்து பகுதியில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக குவிந்தனர்.

காலை முதலே கிருத்திகை தினத்தில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும், கோயிலுக்குள் அனுமதிக்கபட்டனர். நிர்வாகத்தின் தரப்பில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கபடாமல், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தை சுகாதாரத்துறை ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை, மாவட்ட நிர்வாகமும் ஏன் முருகன் கோவில் நிர்வாகத்தை கேள்வி கேட்கவில்லை,

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நோய் தொற்றுக்கு எதிராக போராடுவதாக கூறி வருகிறார். ஆனால், திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தால் நோய் அதிகமாகும் என்று பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர், திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் அன்று முருகன் கோவிலில் குவிந்த கூட்டத்தைப் பார்த்து அச்சம் அடைந்து உள்ளார்கள். உண்மையான முருகன் கோயில் பக்தர்கள் இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை எங்கே சென்றார்கள் என தெரியவில்லை, இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய கோயில் நிர்வாகம் எங்கே சென்றார்கள், இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன் வரவில்லை, என பக்தர்கள் புலம்பினர்.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால், முருகன் கோயிலை கட்டுப்படுத்த முடியவில்லையா? என்ற கேள்வி எழுகிறது, இதற்கு முழு முதற் காரணம் அனைத்தும் தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தான், பதில் கூற வேண்டும். இந்த கோயில் நோய்தொற்று காலத்தில் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை, என்று சமூக ஆர்வலர்கள் தொடர்து குற்றச்சாட்டு,

இந்த நிர்வாகத்தை இனியாவது சரி செய்வார்களா, அல்லது வேடிக்கை பார்ப்பார்களா, என்ற கேள்வி எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். இதே, பக்கத்தில் உள்ள இராணிபேட்டை மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கர் கோயில் நிர்வாகத்தை அந்த மாவட்ட நிர்வாகமும், அந்த மாவட்ட காவல் துறையும் எப்படி பக்தர்களை நிர்வகிறார்கள் என தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வரசொல்லுங்கள் என பல பெண் பக்தர்களே புலம்பி கொண்டு சென்றார்கள்…

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *