May 13, 2021

திருப்பதி பெருமாளுக்கு சொந்தமான, சொத்துக்களின் விவரங்கள், தேவஸ்தான நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

1 min read

நாட்களாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக சொத்துக்களை வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் பெருமாளுக்கு இந்தியா முழுவதும் 1128 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இதில் பக்தர்கள் பெருமாளுக்கு வழங்கிய சொத்துக்களின் மதிப்பு 8089 ஏக்கர். இதில் விவசாய நிலங்கள் 2085 ஏக்கரும், விவசாயம் அல்லாத 6003 ஏக்கரும் ஆகும். 1974 இல் இருந்து 2014 வரை பக்தர்கள் பெருமாளுக்கு வழங்கிய சொத்தின் மதிப்பு இவையாகும். இவற்றில் 335 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது.

அதில் வந்த வருமானம் மட்டும் ₹6.13 கோடி. நவம்பர் 28ஆம் தேதி வரை பெருமாள் பெயரில் உள்ள நிகர சொத்துக்களின் மதிப்பு 7754 ஏக்கர். இதில் விவசாய நிலங்கள் 1792 ஏக்கர். விவசாயம் அல்லாத நிலங்கள் 5961 ஏக்கர் என மொத்தம் 7754 ஏக்கர் ஆகும். இது குறித்து முழு விவரங்களும் www.tirumala.org என்ற இணையதளத்தில் பொது மக்களின் பார்வைக்காக தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *