April 22, 2021

செங்குன்றம், புழல் பகுதிகளில், சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற, உடனடி நடவடிக்கை எடுத்த மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.சுதர்சனம்…

1 min read

தீர்த்தகரபட்டு ஊராட்சிக்குட்பட்ட விவேக் அக்பர் அவென்யூ குடியிருப்பு பகுதிகளில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததை தொடர்ந்து அங்கு குடியிருந்து வரும் பொதுமக்கள் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

உடனடியாக அந்த பகுதிக்கு வருகை தந்து ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டு ஆக்கிரமிப்பு பகுதிகள் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரி நீர் வெளியேறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் உடடினயாக அலைப்பேசியில் பேசினார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக பொன்னேரி கோட்டாட்சியர் செல்வத்தை தொடர்பு கொண்டு விவேக் அக்பர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கோட்டாட்சியர் செல்வம், தாசில்தார் மணிகண்டன், புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மழை நீர் செல்லும் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆய்வின் போது அவருடன் புழல் ஒன்றிய திமுக செயலாளர் நா.ஜெகதீசன், ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கரன், தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சி செயலாளர் ஆர்.ஸ்டாலின், ஏ.கஜபதி, என்.தேவன், டில்லி ரமேஷ், செ.யுவராஜ், ஜெ.முருகன், ஆர்.நெடுமாறன், தே.ரா.அருண்குமார், அ.நாவலன் (எ) டேவிட், லேண்ட் ரமேஷ், ஏ.சரவணன், ஜெ.அகிலன், எஸ்.சத்திய குமார், புள்ளிலைன் ஜி.தினேஷ், அ.டில்லி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இப்பகுதி மக்கள் எம்எல்ஏவுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

அதேபோல், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாடியநல்லூர் ஊராட்சி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாடியநல்லூர் சப்வே அருகில், சுமார் 20 ஆண்டு காலமாக மழைக் காலங்களில் நீர் வெளியேறாமல் பல வீடுகளில் நீர் தேங்கி அவதிக்குள்ளாகி வந்தனர். சென்னை வட கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் உத்தரவின்பேரில் சோழவரம் ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே.கர்ணாகரன் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியை இரவு பகல் பாராமல் நான்கு 4 நாள்களாக செய்து வந்தார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு மழைநீர் வெளியேற்றப்பட்டது.
இதனை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் நேரில் பார்வையிட்டார். கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன்
அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *