சென்னை, சூளைமேடு காவலர்கள் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது…
1 min read
சென்னை, F5 சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நமச்சிவாயபுரம் ஆற்றோரத்தில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சூளைமேடு காவல் நிலைய சிறார் மன்றம் சார்பாக நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பு நிவாரண உதவிகளை இன்று நமச்சிவாய புரத்தில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் வைத்து துணை ஆணையர் ஆர்.கிருஷ்ணராஜ் , உதவி ஆணையர் எஸ்.முத்துவேல்பாண்டி, ஆய்வாளர் ஜி.ஆனந்தபாபு, உதவி ஆய்வாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், வி. மாரீஸ்வரன், ஏ.திலகவதி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நிவாரண உதவிகளை வழஙகினர்.

மளிகை சாமான்களின் விவரம் பின்வருமாறு

- அரிசி -5kg
- பருப்பு-1kg
- உப்பு -1kg
- கோதுமை மாவு-1kg
- எண்ணெய்-1 lit
- சிறுபருப்பு-1/2kg
- புளி-1/4 kg
- கடுகு-100 gm
- பூண்டு -1/4 kg
- வெந்தயம்-50gm
- சீரகம்-50 gm
- மிளகு-50gm
- சலவை சோப்-2
14.Hamam-1 - குழம்பு மிளகாய் தூள்-200 gm
- மல்லிதூள்-50gm போன்ற பொருட்கள் இருந்தன.

செய்தியாளர் – E.K.சன்முகராஜன் நிழல்.இன் – 8939476777