January 18, 2022

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நல் உள்ளங்கள்…

1 min read
Spread the love

நிவர் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் ஆரணியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ள நீர் பழவேற்காடு ஏரியில் கலந்து பின் முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்கிறது. ஆரணியாற்று கரையோர கிராமங்களான ஆண்டார்மடம், செஞ்சியம்மன் நகர் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவிக்கும் இந்த கிராம மக்களுக்கு புதுவாழ்வு சமூக நல அறக்கட்டளை சார்பில், மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.

பாக்கம்,திருமலை நகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. இதனை பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, லைட் ஹவுஸ் கவுன்சிலர் செவ்வழகி எர்னாவூரன் ஆகியோர் முன்னிலையில், இந்த நிறுவனத்தின் நிர்வாக தலைவர் வெற்றிக்குமார், செயலாளர் கோவர்த்தனன், பொருளாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் தூயவன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர். புதுவாழ்வு சமூக நல அறக்கட்டளை பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அனுப்பம்பட்டு ஊராட்சியில், ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அவர்கள் ஆலோசனையின் பேரில், கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் அதிகமாக மழை நீர் தேங்கி நின்ற பகுதிகளில் அவைகளை மோட்டார் பொருத்தி வெளியேற்றியதுடன்,

அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்த வேலப்பாக்கம் பகுதி மக்களை அரசு பள்ளியில் தங்க வைத்து உணவுகள் ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்னர் தொடர்ந்து சில தினங்கள் அவர்களுக்கு தனி இடத்தில் உணவு தயார் செய்து நேரடியாக பாதிக்கபட்டவர்கள் பகுதிகளுக்கு கொண்டு போய் வழங்கினார்.

அதேபோல், நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆண்டார் மடம் மற்றும் அபிராம மடம் மக்களுக்கு
அவர்களின் பசியை போக்கும் விதமாக கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை (வஞ்சிவாக்கம்) மற்றும் வள்ளலார் தாயார் சின்னமையார் தர்மசாலை (சின்ன காவனம்) சார்பாக, முகாமில் தங்கி இருந்த மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது.

அதற்க்கு முந்தைய நாளும், நவீன் உள்ளிட்ட, கற்கை நன்று நிர்வாகிகள் முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு காலை சிற்றுண்டியும், உணவும் வழங்கினர். அதனால், முகாமில் தங்கியுருந்த மக்கள் கற்கை நன்று நிர்வாகிகள் நவீன் உள்ளிட்டவர்களையும், வள்ளலாரின் தாயார், சின்னம்மையார் தர்மசாலை நிர்வாகிகள் ரவி அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

பழவேற்காடு அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், குமரேசன், மொய்தீன், உசேன், பிரதாப், ஆகியோர் விடுதலை சமூக அறக்கட்டளையின் சார்பில், நிவர் புயலால், பழவேற்காடு சுற்றியுள்ள கிராமங்களான ஆண்டார்மடம், குளத்துமேடு, செஞ்சியம்மன் நகர், கல்லுகடைமேடு, ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், வாழ்வாதாரம் இழந்து இருக்கும் அந்த மக்களுக்கு, இந்த அமைப்பின் சார்பில் உணவு, மற்றும் அரிசி, காய்கறிகள், மளிகை சாமன்கள் வழங்கி வருகின்றனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *