நிவர் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை, திமுக கிழக்கு மாவட்ட பொருப்பாளர் டி.ஜே.. கோவிந்தராஜ் பார்வையிட்டார்…
1 min read
நிவர் புயலின் தாக்கத்தால், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மிக அதிகமான மழை கொட்டியது. அதில் ஆந்திராவில் உள்ள பிச்சாடூர் அணை நிரம்பியதால், கடந்த 26 ம் தேதி ஒரே சமயத்தில், 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதனால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. அதில் தத்தைமஞ்சி, கடப்பாக்கம், வஞ்சிவாக்கம், ஆண்டார்மடம் போன்ற கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து வீடுகளையும், நெற்பயிற்களையும் சூழ்ந்தன, அதனால் அந்த கிராம மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இதை அறிந்த, திமுக திருவள்ளுர் கிழக்கு மாவட்ட பொருப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜ் அவர்கள், பாதிக்கப்பட்ட கடப்பாக்கம், ஆண்டார்மடம், தத்தைமஞ்சி, காணியம்பாக்கம் பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு, புடவை, வேஷ்டி, போர்வைகள் மற்றும் அரிசி, காய்கறிகள், அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது அவருடன், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், பூமிநாதன், மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பா.சுகுமாரன், மீஞ்சூர் ஒன்றியக் குழு தலைவர் அத்திப்பட்டு G.ரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் KG.பாஸ்கர்சுந்தரம், மாவட்ட துணை செயலாளர் கோளூர் கதிரவன், மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், மீவி.கோதண்டன், காசு.தன்சிங், பா.து. தமிழரசன், ஆ.ராஜா

இலம்பேடு ஆ.பாளையம், அ.முனுசாமி, ரவிச்சந்திரன், கஸ்தூரி தசரதன், TC.சக்திவேல், ஏகாம்பரம், ஒன்றிய கவுன்சிலர் DR.மாதவி, ஊராட்சி மன்ற தலைவர் கா.சு.ஜெகதீசன், காசு.அண்ணதாஸ், பார்த்தீபன், தத்தை TV.கிருஷ்ணன், TE.நாகராஜ், துலுக்காணம், ப.தமிழரசன்,ஆவூர் அருள், ப.கலைவாணன், பொன்.கு.லோகநாதன்நந்தியம் ஏ.கார்த்திக், கடப்பாக்கம் நாகலிங்கம், ஆதிகேசவன், சரண்ராஜ் , E.ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி அளவில் உள்ள திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா, மில்டன்
நிழல்.இன் – 8939476777