January 28, 2021

பழவேற்காடு அருகே, அதிகாரிகளின் அலட்சியத்தால், துண்டிக்கப்பட்ட கிராமம், பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியரை திசை திருப்பிய அதிகாரிகள் பொதுமக்கள் ஆவேசம்…

1 min read

திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் நிவர் புயல் காரணமாக பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் வருவாய் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், சாலைகள் உடைக்கப்பட்டது.

அதனால், ஆண்டார்மடம் கிராமம் முற்றிலும் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் உணவு, நீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அவர்கள் இது குறித்து ஆய்வு செய்ய பிரளயம் பாக்கம் மற்றும் ஆண்டார் மடம் கிராமங்களுக்கு நேரில் சென்றார். அப்போது பிரளயம் பாக்கம் கிராமத்தில் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்தை முழுமையாக பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியரை அங்கிருந்து வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவசரமாக ஆண்டார்மடம் கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.

ஆனால் தத்தைமஞ்சி, கடப்பாக்கம் வழியாக ஆண்டார்மடம் கிராமத்திற்கு செல்லாமல், போலாட்சியம்மன் குளம் வழியே துண்டிக்கப்பட்ட மறுகரைக்கு மாவட்ட ஆட்சியர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து பாதிக்கப்பட்ட கிராமத்தையும், துண்டிக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டார். அப்போது மறுகரையில் நின்றிருந்த கிராம மக்கள், எங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிட வேண்டும், சாலை துண்டிக்கபட்ட மறுகரையில் நின்று, நீங்கள் பார்த்துவிட்டு சென்றால் எப்படி, என கரையின் மறுபக்கத்தில் இருந்து கூச்சலிட்டனர்.

உடனே அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை அவசரமாக வேறு இடத்தில் பார்வையிட வேண்டும் என அழைத்துச் சென்றனர். வஞ்சிவாக்கம் மேம்பாலம் அருகே ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்ட ஒரு இடத்தை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியர் ஆண்டார்மடம் கிராமத்திற்கு செல்லாமல் அவசரமாக கிளம்பி சென்றுவிட்டார். இதனால் ஆண்டார்மடம் மற்றும் பிரளயம்பாக்கம் கிராம மக்கள் ஆவேசமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் கிராமம் துண்டிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட வராமல் பாதியிலேயே திரும்பி சென்றது குறித்தும், கிராம மக்கள் வருவாய்துறை அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், மணலால் ஆற்றிற்க்கு கரை அமைத்த பொதுபணி துறை அதிகாரிகளால், இன்று திருவள்ளுர் மாவட்டத்திலேயே அதிக அளவில் முழுமையாக பாதிக்கபட்டது. எங்கள் ஊர் ஆண்டார்மடம் கிராமம் தான், எங்களோடு இரவு, பகலாக கடைநிலையில் இருக்கும் கிராம நிர்வாக அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர். ஆனால், சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் இன்று மாவட்ட ஆட்சியர் எங்கள் ஊரின் உள் வராமல் சென்றுவிட்டார்.

எங்கள் ஊரின் உள் தேங்கி நிற்க்கும் வெள்ள நீர் வடியாமல் ஒருவாரமாக பாசை படிந்து போய் தேங்கி நிற்கிறது. நாங்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல், அவதிபட்டு கொண்டு இருக்கிறோம். இன்று மாவட்ட ஆட்சியரை தவறாக வழிகாட்டியதை போல், நாளை, வெள்ள சேதங்களை பார்வையிட வரும் மத்திய அரசு பிரதிநிதிகள் எங்கள் ஊருக்கு வராமல், சென்றால், நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி போராட வேண்டிய நிலை வரும் என மன குமுறலுடன் பேசினர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *