சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில் பனைவிதை நடும் பணியை, தலைவர் சற்குணன் துவக்கி வைத்தார்…
1 min read
மாவட்டத்தில் உள்ள 526 ஊரட்சிமன்ற தலைவர்களுக்கும்,
“மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை” யின் சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும் செயல்படும், ஊராட்சி தலைவர்களின் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மூலமாக, ஒரு வேண்டுகோள், முன் வைக்கபட்டு இருந்தது.

அதில், ஒரு ஊராட்சிமன்ற தலைவராக உள்ள ஒருவர் தங்களுடைய பணியென்பது, தங்களுடைய ஊருக்கு, சாலை அமைத்து கொடுப்பது, தெருவிளக்கு அமைப்பது, குடிநீர் வழங்குவது, என்பது மட்டும் தான் என்று இல்லாமல், அதையும் கடந்து தொலைநோக்கு பார்வையுடன், மக்கள் மனதில் நிலைத்து நிற்க்கும் வகையில், மக்கள் நலப்பணிகள் செய்துவிட்டு போகவேண்டும், என்பது தான். அப்படி செய்யவேண்டிய மக்கள் நலப்பணிகள் எவ்வளவோ உள்ளது, அதில் ஒன்று தான் பனைவிதைகளை விதைப்பது.

ஆகவே, அந்த நல்ல பணியை, நமது திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இந்த ஆண்டு பனைவிதைகளை விதைக்க துவங்கினாலும், அடுத்த 12 ஆண்டுகள் கழித்து ஒவ்வொரு ஊராட்சியிலும் 2000 முதல் 3000 ஆயிரம் வரை பனைமரங்கள், ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்க்கும். பனையின் வேர் முதல் ஓலை வரை கிடைக்க கூடிய அனைத்து பொருட்களின் மூலம் மக்கள், பனை பொருள் உற்பத்தியாளர் சங்கத்தை நிறுவி, உள்ளுரிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்கள் பயன் அடையலாம். என, வலியுறுத்தபட்டு இருந்தது.

அதன்படி, சோழவரம் ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சியில், பனைவிதை நடவு செய்யும் நிகழ்ச்சி, ஆத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் சற்குணன் தலைமையில் நடந்தது. அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு பனை விதைகளை வழங்கி, பனை விதைப்பை துவங்கி வைத்த ஊராட்சிமன்ற தலைவர் சற்குணன் அதன் பயன்களை எடுத்துரைத்தார்.

பின்னர், மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின், தலைவர் பாலகிருஷ்ணன் பனையின் பயன்கள் குறித்தும், பனை பொருட்களின் மூலம் கைவினை பொருட்கள் மற்றும் பனைவெல்லம் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி வழங்கபட உள்ளது குறித்தும், பேசினார். இறுதியாக, ஊராட்சி செயலாளர் சேது நன்றி கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
