பூந்தமல்லியில், மழை வெள்ளதால் பாதிக்கபட்ட பகுதிகளை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ பார்வையிட்டார்…
1 min read
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி, பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நிவர் புயல் மழையால் பாதிக்கப்பப்பட்ட பகுதிகளை, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் இருந்தார். செம்பரம்பாக்கம் ஊராட்சி, பழஞ்சூர் கிராமத்தில் நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக, அவர் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரியை தொடர்புக்கொண்டு, பேசினார்.


அப்போது மக்கள் கொரோனா மற்றும் புயல் மழையால் பாதிக்கபட்டு உள்ள போது இது போன்ற உணவு பொருட்களை தரமில்லாமல் வழங்குவது முறையா.. என கேள்வி எழுப்பியதுடன், இனி இது போல் அரிசி மக்களுக்கு வழங்காமல் பார்த்து கொள்ளுங்கள் எனவும் கொண்டதுடன், இதற்க்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர் உத்தரவிட்டார். அப்போது அவருடன் பூவிருந்தவல்லி ஒன்றிய குழு தலைவர் M.ஜெயக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், மாவட்ட கவுன்சிலர் A.G.ரவி, பழஞ்சூர் பாஸ்கர், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777
