அம்பத்தூரில், அனைத்து தொழிற்சங்கங்களின் எழுச்சிகர கண்டன ஆர்ப்பாட்டம்…
1 min read
நாடு முழுதும் விவசாயிகளின்
வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கும் மத்திய அரசின், புதிய வேளாண் மசோதா திணிப்பை விலக்கக்கோரி, லட்சக்கணக்கில்
வடமாநில விவசாயிகள், கடந்த சில நாட்களாக, டெல்லி மாநகரை நோக்கி முற்றுகையிட்டு உள்ளனர்.

இந்திய பாராளுமன்றத்தை உலுக்கும் விவசாயிகளின் புரட்சிகர இப் போராட்டத்திற்கு
நாடு முழுதும் மக்கள் ஆதரவுவலுத்து வருவது கண்டு மத்திய அரசு திணறி வருகிறது. முதலாளித்துவ சுரண்டல் கொள்கைக்கு வழி வகுக்கும் புதிய வேளாண் மசோதாவை உடனடியாக விலக்கக்கோரி
நடைபெறும் விவசாயிகளின் இப்புரட்சிப் போராட்டத்திற்கு வ்லு சேர்க்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், மற்றும் தொழிற்ச சங்கங்களும் அணிதிரண்டு வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் எழுச்சிகர தொடர் போரட்டங்கள் நடைபெறகிறது. அதன்படி, நேற்று
சென்னை, அம்பத்தூர் OT பேருந்து நிலையம் அருகே உணர்ச்சிகர கண்டன முழக்க
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், எ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.டி.யு.சி, எல்.பி.எப் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் கலந்து கொண்ட அந்த ஆர்பாட்டத்திற்கு, சி.டி.யுவின் நிர்வாகி லெனின் சுந்தர் அவர்கள் தலைமை வகித்தார்.

ஏ.ஐ.யு.சியின் நிர்வாகிகள் p.மாரியப்பன், துரைசாமி, பன்னீர்செல்வம்,
ஆவடி P. K. மூர்த்தி,விஜயசீலன், செல்வகுமார்,
ரவிச்சந்திரன், பொன் குமார், சி.ஐ.டி.யு வின் நிர்வாகிகள் பால்சாமி, P.N.உன்னி, எல்.டி.யு.சி யின் நிர்வாகிகள் முனுசாமி, மோகன், எல்.பி.எப் நிர்வாகிகள் ராஜ்குமார், நந்தகோபால் உள்ளிட்ட அனைத்து சங்கங்கள்
சார்ந்த பெருவாரியான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றினர், எழுச்சிகர முழக்கங்கள் எழுப்பினர்.
செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777
