செங்குன்றத்தில், கைலாஷ் நினைவு அறக்கட்டளை அலுவலகத் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
1 min read
சோழவரம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழு செயலாளருமான, பி.என்.கே. கிருஷ்ணன் மகன் கைலாஷ் நினைவாக, “கைலாஷ் நினைவு அறக்கட்டளை” கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
கைலாஷ் நினைவு அறக்கட்டளை அலுவலகத் திறப்பு விழாவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதில், செங்குன்றம் பேரூராட்சி, புள்ளிலைன், தீர்த்தம்கிரியம்பட்டு, பாடியநல்லூர் ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு போர்வை,500 பேருக்கு மதிய உணவு மற்றும் ஊனமுற்றோருக்கு நான்கு சக்கர வண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிறுவனர் பி.என்.கே. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் புள்ளிலைன் தமிழ்ச்செல்வி ரமேஷ், தீர்த்தம்கிரியம்பட்டு கவிதா டேவிட்சன், புள்ளிலைன் துணைத்தலைவர் கே.மாதவன், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஏ.பிஸ்மில்லா, கே.ராஜவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புழல் சரக உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், பொன்னேரி உதவி வட்டாட்சியர் பாலாஜி, செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர், செங்குன்றம் குறுவட்ட வருவாய் அலுவலர் ஜெய்கர் பிரபு, காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரவீந்திரன், பரக்கத் ஹுசைன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

டி.ஏ. குமார், ஜஸ்டின், எம்.லட்சுமிபதி, எம்.முருகன், பி.பாலாஜி, பெரியார் நகர் சுரேஷ், பாலு, சிவக்குமார், நாகராஜ், தேவராஜ், ஆர். கண்ணன், பி.ரமேஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர். இதில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.மகேந்திரன், பவானி நகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்பு குழு தலைவர் எஸ்.ஜோசப், துணைத்தலைவர் ஏ.இருதயராஜ், துணைச் செயலாளர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், கணக்கு தணிக்கையாளர் ஏ.ஜோசப், கௌரவ ஆலோசகர்கள் இ.மாரியப்பன், ஜான் அலோசியஸ், செயற்குழு உறுப்பினர்கள் முத்து மீரான், அம்மன் சேகர், அந்துவான் சத்தியநேசன், ஜூலியன், ரமேஷ், தீர்த்தம்கிரியம்பட்டு முன்னாள் துணைத்தலைவர் கருணா, பிரேம், சமூக ஆர்வலர் கார்த்திக் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆர்.அசோக், கே.விக்னேஷ், எஸ்.பவித், ஜி.தரணி, சிவா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

செய்திகள் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
