சென்னையில் கனமழை தொடர்வதால், புழல் ஏரி திறப்பு, 500 கனஅடி நீர் வெளியேற்றம்…!
1 min read
அண்மையில் உருவான நிவர் புயலினால் பெய்த கனமழையாலும், புரேவி புயலால் உருவான மழையினாலும் செங்குன்றம் – புழல் ஏரி நிரம்பி வந்தது. 21.20 கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி தற்பொழுது 19.79 கனஅடியாக உயர்ந்துள்ளது. 1000 கனஅடிக்கும் அதிகமான நீர் வந்து கொண்டிருப்பதால், இன்று அன்று மாலை 3.00 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அவர்கள் இன்று பத்திரிகை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஏரி திறக்கப்படும் என்ற ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ். சுதர்சனம் பார்வையிிட்டார், அப்போது செங்குன்றம் பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், புழல் ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வி.திருமால், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் கோட்டீஸ்வரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மழையின் அளவு அதிகரித்து நீர்வரத்து அதிகரித்தால், மேலும் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படும் என்று கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, மற்றும் பொதுப்பணி திலகம் ஆகியோர் கூறினர். அத்துடன், பொதுபணி துறை அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் ஏரி மதகை திறந்து விட்டனர்.

இதில், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார், துணை வட்டாட்சியர் பாலாஜி, செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர், புழல் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன், செங்குன்றம் குறுவட்ட ஆய்வாளர் ஜெய்கர் பிரபு, காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரவீந்திரன், பரக்கத் ஹுசைன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் புழல் ஏரி பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.
செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
