சோழவரம் ஒன்றியத்தில், அதிமுக கிளைகள் அளவில் மகளிர் பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை கூட்டம் நடந்தது…
1 min read
அதிமுக வின், திருவள்ளுர் வடக்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சிருணியம் பலராமன் அவர்களின் முயற்சியால், பொன்னேரி தொகுதியில் அடங்கிய மீஞ்சூர் மற்றும் சோழவரம் தொகுதி முழுவதும் மகளிர் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணியை தீவிரமாக அமைக்கபட்டு வருகிறது.

அதன்படி, சோழாவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தச்சூர், ஆண்டார்குப்பம், பஞ்செட்டி, பெருஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார அனைத்து கிளைகளிலும், மகளிர் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டம், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் அவர்கள் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் கார்மேகம் முன்னிலையிலும், ஆண்டார்குப்பம் ஆளவந்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அண்ணா தொழிற்சங்க செயலாளரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கமலகண்ணன் கலந்து கொண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர்கள் சற்குணன், சீனிவாசன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
