பழவேற்காடு அரசு மருத்துவமனை 24 மணி நேரம் இயங்க துவங்கியது, மீஞ்சூர் சேர்மன் ரவி ஆய்வு…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை 24 மணிநேரம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பு பணிகள் தற்போது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரகத்தின் மூலம் விரைவாக பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனை, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திபட்டு ரவி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊடுகதிர் பிரிவு, ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மையங்களை பார்வையிட்டு, பின் நோயாளிகள் உள்ளிருப்பு நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் வார்டுகளையும் பார்வையிட்டார்.

மேலும் அதற்கான வசதி வாய்ப்புகள் குறித்து பணியில் இருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பருவமழை காலம் என்பதால் மருத்துவமனைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின் சப்ளை செய்யப்படும் ஜெனரேட்டர்களை சரியாக இயங்குகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பழவேற்காடு அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் சங்கர், நந்தியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு உரிமை நல பிரிவு அமைப்பாளர் பழவை முஹம்மது அலவி, கன்னிமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
