January 25, 2021

பொன்னேரி அருகே, விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, 200 சவரன் நகை கொள்ளை…

1 min read

பொன்னேரி அருகே உள்ள உதண்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முனிநாதன் (50) விவசாயி, இவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். மூத்தமகள் உக்ரைனில் மருத்துவருக்கு படித்து வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த முனிநாதன் தனது கிராமத்தில் நிலத்தடிநீர் உவர்ப்பு தன்மையாக மாறிபோனதால், கடந்த சில வருடங்களுக்கு முன் தனது விளைநிலத்தை விற்றுவிட்டார்.

பின்னர், தனக்கு இரண்டு மகள்கள் உள்ளதால், நிலத்தை விற்ற அந்த பணத்தில், நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு கூடி கூடிகொண்டே போவதால், இரண்டு மகள்களுடைய திருமணத்திற்காக அப்போதே, நகைகளை வாங்கி வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்று திருவொற்றியூரில் அவருடைய மனைவியின் அண்ணன் உடல்நிலை சரியில்லாததால் சுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், முனிநாதனின் மனைவி நேற்று காலை 11 மணியளவில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பிறகு 3 மணியளவில் முனிநாதனும் அவருடைய இளைய மகளும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

பின்னர், இரவு 10.30 மணி அளவில் வீட்டிற்க்கு வந்தவர், காரை நிறுத்திவிட்டு வீட்டின் கதவை திறந்த போது, கதவு உள் புறமாக தாழிடப்பட்டு இருந்ததால், சந்தேகம் அடைந்த முனிவேல் அக்கம்பக்கம் இருந்தவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்த போது, வீட்டின் பின்புற கதவின் பூட்டு மற்றும் தாழ்ப்பாழ் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதை பார்த்ததும் பதறிபோன முனிநாதன், உடனே வீட்டின் மற்ற அறைகளில் இருந்த பீரோக்களை பார்த்ததில், அதில் இருந்த 200 சவரன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகிய அனைத்தும் கொள்ளை போய்விட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த பொன்னேரி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் பொன்னேரி சரக துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர்

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *