சென்னை வட கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், செங்குன்றத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்…
1 min read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையை ஏற்று சென்னை வட கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சென்னை வட கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்குன்றம் பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன், புழல் ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன், சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை.வீரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் புழல் என்.நாராயணன், ஜெ.ஜெய்மதன், மேனகா நித்யானந்தம், குறிஞ்சி எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாநில மீனவர் அணி செயலாளர் பத்மநாபன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் கணேசன், மாவட்ட அவைத்தலைவர் டி.துரை, துணைச் செயலாளர்கள் டி.ராமகிருஷ்ணன், அறிவழகி பாலகிருஷ்ணன், பொருளாளர் கர்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் என்.பரந்தாமன் (மாதவரம் வடக்கு), ஜி.துக்காராம் (மாதவரம் தெற்கு), தி.மு. தனியரசு (திருவொற்றியூர் கிழக்கு), கே.பி. சங்கர் (திருவொற்றியூர் மேற்கு),

மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் வி.திருமால், ஏ.வி. ஆறுமுகம், கே.காசிநாதன், எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய பகுதி நிர்வாகிகள், அனைத்து மாவட்ட அணி, பகுதி, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், மகளிர் மற்றும் அனைவரும் உள்ளிட்டோர் 2000த்திற்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர்கள் ஆர்இஆர். விப்ரநாராயணன், இரா. ஏ. பாபு, மாவட்டப் பிரதிநிதி ஏ. திராவிட மணி, புழல் ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.டி. குமார், நகர அவைத் தலைவர் ஜெ.ரகுகுமார், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், டி.அருள்தேவநேசன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், பொருளாளர் என்.சந்திரசேகர், ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.கோபால், கே.சுந்தரம், பி.செல்வம், இளைஞர் அணி அமைப்பாளர் கேஎல்என். லெனின்குமார், காங்கிரஸ் ஆர்.ஆர். சாந்தகுமார், கம்யூனிஸ்ட் சீனிவாசன், ஜோதி, பாஸ்கர், மதிமுக ஆர்.செல்வக்குமார், தே.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி ஷேக் முஹம்மது அலீ, அப்துல் காதர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777