திருவள்ளுரில், திமுகாவின், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்கள் சார்பில், வேளான் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பட்டம்…
1 min read
திருவள்ளூர் மத்திய மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் டெல்லியில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் முதுகெலும்பாக போற்றப்படும் விவசாயிகளுக்கு ஆதரித்தும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ள மத்திய அரசையும் அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் ரயில் நிலைய அருகில் நடந்தது.

ஆர்ப்பாட்டதிற்க்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆவடி சா.மு.நாசர்- திருத்தணி எம்.பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர், ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் உள்பட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777
