பழவேற்காடு அருகே, ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று கடலில் ஒதுங்கியதால் பரபரப்பு. உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலிசார் விசாரணை…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் இளைஞர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடலோரத்தில் ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று கரை ஒதுங்கியது.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கடற்கரையில் உடைந்த நிலையில் கிடந்த ஆளில்லா விமானத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஆள்ளில்லா விமானம் மாணவர்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்துவதா, அப்பது உளவு பார்க்க அனுப்பப்பட்டதா அல்லது கடலோர காவல் படையினர் கண்காணிப்பு பணிகளுக்காக ஈடுபட்டுத்தும் விமானமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழவேற்காடு பகுதியை ஒட்டி ராக்கெட் தளம் உட்பட துறைமுகம், கப்பல் கட்டும் தளம், அனல்மின் நிலையங்கள் என பல முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளதால், இப்பகுதியில், ஆளில்லாத விமானம் ஒன்று திடீரென மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கியதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777