பொன்னேரியில், பலராமன் எம்.எல்.ஏ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…
1 min read
பொன்னேரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, புதிய பேருந்து நிலையம் அருகில் அவருடைய திருவுருவப் படத்திற்கு, திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் அவர்கள் தலைமையில் அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதே போல், மீஞ்சூர் ஒன்றிய பொருளாளர் ஸ்ரீதர், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் படத்திற்க்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அனுப்பம்பட்டில், கூட்டுறவு சங்க தலைவரும், மீஞ்சூர் ஒன்றிய அம்மா பேரவை பொருளாளருமான உமாமகேஸ்வரன், முன்னாள் முதல்வர் திருவுருவ படத்திற்க்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வேலூர் ஊராட்சிமன்ற தலைவர் சம்பத் வேளுரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா, மில்டன்
நிழல்.இன் – 8939476777