எல்லாபுரம் ஒன்றியம், பழங்குடினரின் வீடுகளுக்கு பிளாஸ்டிக் மேற்கூரை பரதக்கலை ஊராட்சி மன்றத்தலைவர் சித்ராகுமார் வழங்கினார்…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம்
கொடுவள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் 120 பழங்குடி இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் மேற்கூரைகள் மிகவும் பழுதடைந்து தற்போது பெய்து வரும் மழை காரணத்தினால் மேற்கூரையில் இருந்து மழைநீர் வீட்டின் உள் ஒழுகுகிறது.

இதனால் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வந்த 65 குடும்பங்களுக்கு வீட்டின் மேற்கூரையின் மீது போடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் வழங்க முடிவு செய்தார். அதன்படி, அவரது சொந்த செலவில் பிளாஸ்டிக் பர்தாக்களை விலைக்கு வாங்கி, இந்திரா நகர் பகுதிக்கு நேரில் வீடு வீடாக சென்று வழங்கினார்.

அப்போது அவருடன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சரத்குமார், வார்டு உறுப்பினர் ரமேஷ், ஈபி.சேட்டு, திராவிட சுரன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரந்தாமன், சுரேஷ், ரஞ்சித்,சிவா, கோபி, கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777