கும்மிடிப்பூண்டி பஜாரில் எம்எல்ஏ தலைமையில் ஜெயலலிதா நினைவு நாள் விழா…
1 min read
கும்மிடிப்பூண்டி பஜாரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நகர செயலாளர் மு.க.சேகர், மாவட்ட பிரதிநிதி தன்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி இமயம் மனோஜ், ஓடை.ராஜேந்திரன், எம்.எஸ்.எஸ்.சரவணன், எஸ்.டி.டி.ரவி,நகர பாசறை செயலாளர் சரவணன்,தீபக் செந்தில், நகர இலக்கிய அணி நிர்வாகி ஏ.மோகன் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அவரை தொடர்ந்து அதிமுகவினர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் அப்துல் மஜீத்,ஆர்.டி.சீனிவாசன், விஸ்வநாதன், ஜோதி ராமலிங்கம், தீபக், மகளிர் அணி நிர்வாகிகள் பி.சுசிலா, சாந்தி, விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால் நாயுடு, மாநில மீனவரணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள அதிமுக கொடி கம்பம் பகுதியில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் ஒன்றுகூடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான சேகர், நாகராஜ், பிரகாஷ், நிஜாம், முருகன், சீனன், ஐயப்பன், ஆந்திர மாநில அதிமுக பிரமுகர் ரஞ்சித் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். அதே போல ஆரம்பாக்கம் நொச்சிகுப்பத்தில் ஒன்றிய கவுன்சிலர் ரவக்கிளி ஜெயராமன் தலைமையில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
எக்குமதுரையில் ஒன்றிய பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன் தலைமையிலும், பல்லவாடாவில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார் தலைமையிலும், கண்ணம்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சதீஷ் தலைமையிலும்,புது கும்மிடிப்பூண்டியில் அதிமுக பிரமுகர் சுகுமாறன், ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன் தலைமையிலும் ஜெயலலிதா நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777