சென்னை பெருங்குடியில், உள்ள ஜெம் மருத்துவமனையில் கணைய சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு, 10-நாள் இலவச கணைய சிறப்பு சிகிச்சை முகாம் ஏற்பாடு…
1 min read
சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமணையில் கணையம் சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது,
கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணும் வகையில் கணையம் கற்கள், கணையம் புற்றுநோய், போன்ற நோய்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஜெம் மருத்துவமணையில் அனைத்து நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சையளிக்க உள்ளனர்,

இந்தியாவிலேயே முதல் முறையாக, ஜெம் மருத்துவமனையில் தான், கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என, மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
கணையம் சிறப்பு சிகிச்சை மையத்தை, மாவட்ட ரோட்டரி இன்டர்னேஷனல் ஆளுநர் முத்து பழனியப்பன் திறந்து வைத்தார்,

இந்த சிகிச்சை மையம் திறப்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் ஆளுநர் முத்து பழனியப்பன், ஜெம் மருத்துவமணை குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனிவேல், இயக்குனர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் ஆகியோர் கானொளி காட்சி மூலம் கணையம் சிகிச்சை மையம் குறித்த விளக்கங்களை வழங்கினர், மேலும் டிசம்பர் 7.12.20- முதல் 16.12.20-வரை ஆகிய 10 நாட்கள் கணையம் நோய்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசணை முகாம் அமைக்கப்பட உள்ளது, மக்கள் இலவச மருத்துவ ஆலோசணையை பெற்று குறைந்த செலவில் மருத்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவமணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்திகள் – பாலமுருகன்
நிழல்.இன் – 8939476777