முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 4 ஆம் ஆண்டு நினைவு தினம் மாதவரம் வி.மூர்த்தி 1500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்
1 min read
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் மாதவரத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா அவர்கள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், பகுதி செயலாளர் வேலாயுதம், மாவட்டப் பிரதிநிதி மூ.கண்ணதாசன், வழக்கறிஞர் மூ.தமிழரசன், கே.பார்த்திபன், கே.ஆர்.வெங்கடேசன், ஜி.குமரன் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவரம் ஒன்றிய அதிமுக சார்பில், ஒன்றியச் செயலாளர் பி.கார்மேகம் தலைமையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செங்குன்றம் கூட்ரோடு அருகே எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.மனோகரன், ஜி.குணசேகரன், பி.கே. செல்வம், கே.பார்த்திபன், கே.ஆர்.வெங்கேடசன், எஸ்எம்ஜி. சீனிவாசன், வழக்கறிஞர் பி.கே. பாலன், இளங்கோவன், கே.வேலாயுதம், ஆர்.பாலகணேசன், பி.செல்வராஜ், ஜி.மச்சவள்ளி, என்.சங்கையா, முனிகிருஷ்ணன், கே.நித்யானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதே போல், ஆத்தூர் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் சற்குணன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஆத்தூர் ஊராட்சியின் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்திகள் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777