செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா…
1 min read
செங்குன்றத்தில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த சார்பதிவாளர் அலுவலகம், செங்குன்றம் அடுத்த தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசின் சொந்த இடத்தில் ரூ.94.4. லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

அந்த புதிய அலுவலக கட்டிடத்தை, தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்பொழுது செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அதிமுக செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி, சென்னை மண்டல பதிவுத் துறை துணைத்தலைவர் து.பிரபாகர், வடசென்னை மாவட்ட பதிவாளர் இ.இந்திரா, செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலக பதிவாளர் மு.மகேஷ், இணை பதிவாளர் வ.கூ. தனசேகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும்,

அதிமுக புழல் ஒன்றிய செயலாளர் ஆர்.சுப்பிரமணி, ஜி.கே. எழில், சரளா சுகுமார், ஆர்.சங்கரன், தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா டேவிட்சன், பாடியநல்லூர் கே.பார்த்திபன், செங்குன்றம் பேரூர் கழக செயலாளர் எம்.ஆர். தாராசிங், வி.உமாபதி, எஸ்.எம்.ரமேஷ், டாக்டர் ஆர்.முனுசாமி, ஜாபர் உசேன், சூசைராஜ், புள்ளிலைன் சுந்தர், புழல் இளைஞரணி இணைச்செயலாளர் எம்.இளங்கோவன், வடகரை ஆர்.நரேஷ்பாபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ், நண்பன் – அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777