April 22, 2021

செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம், அடிப்படை சாலை வசதியே செய்யாமல், திறக்கப்பட்டது…

1 min read

செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம், பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது அந்த அலுவலாகத்தை, செங்குன்றம் அடுத்த தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசின் சொந்த இடத்தில் இன்று திறக்கப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை சீரமைகபடாமல் இன்று வரை குண்டு குழியுமான சாலையாகவே உள்ளது. புதிய சார்பதிவாளர் அலுவலத்திற்க்கு அந்த சாலையின் வழியாக தான் கார், ஆட்டோ, இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்தும் பயணிக்க வேண்டும்.

சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான கடைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளன. பத்திரப் பதிவிற்கு செல்லும் பொதுமக்களும், கடை உரிமையாளர்களும் அந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அப்பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கழிப்பிட வசதியும் இல்லை.

பத்திர பதிவுக்காக பல கோடி புரளக் கூடிய இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றி புதர் மண்டிய செடி, கொடிகள் முளைத்து உள்ளன. இந்த செடி, கொடிகளினால் கொலை, கொள்ளை, வழிபறிகள் நடக்கவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே அரசு அதிகாரிகளும், சார்பதிவாளர் துறையை சார்ந்த அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அடிப்படை வசதியை செய்து தர வேண்டுமென்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ், நண்பன் – அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *