திருவள்ளூர் அருகே, முதல்வர் திறந்து வைத்த அரசு கட்டிட திறப்பு விழாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்தி குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக ஜீவா செல்வம் என்பவர் உள்ளார். இந்த நிலையில், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

அதற்கான துணை விழா அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் இடம் பெறாததால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து. கருப்பு சட்டை அணிந்து கைகளில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக குறி, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ் .விஜயகுமார் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777