April 22, 2021

கும்மிடிப்பூண்டியில், வேளான் சட்டத்தை எதிர்த்து, சாலை மறியலில் ஈடுபட்ட 64 பேர் கைது…

1 min read

மத்திய அரசின், வேளாண் சட்டங்களை எதிர்த்து, தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சிகளின் பொது வேலை நிறுத்தத்தை ஒட்டி கும்மிடிப்பூண்டியில், பல்வேறு கட்சியினரின் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் துளசி நாராயணன், ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார்,குமார், ஆறுமுகம், எம்.சி.சீனு, குப்பன், லோலநாதன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சம்பத், சிவாரெட்டி, ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன், பென்னிஸ், தாஸ் முன்னிலை வகித்தனர். இதை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை

கும்மிடிப்பூண்டியில், வியபாரிகள் சங்கத்தினர் சார்பில் ஆதரவு தெரிவித்து, 60 சதவீத கடைகள் மூடப்பட்டு இருந்தது. மேலும், பொது வேலை நேரத்திற்கு ஒட்டி சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக பகுதியான ஆரம்பாக்கத்தில் ஆந்திரா எல்லையில் அனைத்து தமிழக பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பயணிகள் ஆரம்பாக்கத்தில் இறக்கி விடப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

எளாவூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம், மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.
சாலை மறியல் ஆர்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெ.அருள், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் விகேந்தர் தலைமை தாங்கினார்கள்.

விவசாயிகள் சங்க நிர்வாகி முருகன் , ஒன்றிய தலைவர் செங்கல்வராயன், பூவலை ஊராட்சி தலைவர் சம்பூர்ணம்மாள், ஆட்டோ சங்க தலைவர் கே.அங்கமுத்து, தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு சுகுணா முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் சுண்ணாம்புகுளம் சாலையில் இருந்து ஊர்வலமாக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். மேலும், எளாவூர் பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டதோடு உருவ பொம்மையை எரித்தனர். அதனால், ஆரம்பாக்கம் போலீஸார் உடனே, சாலை மறியலில் ஈடுபட்ட 82 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி மற்றும் எளாவூரில் சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டவர்களை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுகவினருடன் நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நன்றி தெரிவித்ததுடன் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *