தாமைரைப்பாக்கம் கூட்டுசாலையில், வேளாண்மை திருத்தச் சட்டங்களை, திரும்பப் பெறக் கோரி, திமுக தோழமை கட்சிகள் சாலை மறியல்…
1 min read
திருவள்ளுா் மாவட்டம் தமைரைபாக்கம் கூட்டு சாலையில், விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் கடந்த சில வாரங்களாக போராடிவரும் விவசாயிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு முடிவு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சாலை மறியல் நடத்தப்பட்டது.

எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்திவேல் தலைமையில், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் , காவல்துறையினருக்கும், தள்ளு,முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 மேற்பட்டோரை கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இதில், திமுகவைச் சேர்ந்த தங்கம் முரளி, சீனிவாசன், முனிவேல், பாஸ்கர், நாகலிங்கம், கோடுவெள்ளி சுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், பூந்தமல்லி தொகுதி செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தாமரைப்பாக்கம் சம்பத், பழனி, ரமகண்ணன், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மகேந்திரன், வெங்கல் சிவசங்கரன், உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல், ஆரணியில் வியபாரிகள் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது. மேலும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சார்பில், புதிய வேளான் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து பேரணி நடதப்பட்டது. பேரணி திமுக நகர செயலாளர் ஜி.பி.வெங்கடேசன் தலைமையில் நடந்தது. அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணி விநாயகர் கோயில் வரை நடந்தது. பேரணியில் கலந்து கொண்ட 50க்கும் மேற்ப்பட்டவர்களை கைது செய்த ஆரணி போலிசார், அருகில் இருந்த அனிதா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
செய்திகள் – சுரேந்தர்
நிழல்.இன் – 8939476777