திமுக, தோழமை கட்சிகள் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்
1 min read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட பொறுப்பாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில் திருவொற்றியூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் கட்சி தேசியமணி, பொன்னுரங்கம், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுந்தர்ராஜன், மத்தியக் குழு உறுப்பினர் ஜெயராமன்,
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கண்ணதாசன், மாநில மீனவர் அணி செயலாளர் பத்மநாபன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் கவி.கணேசன், மாவட்ட அவைத்தலைவர் டி.துரை, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் அன்பு செழியன், பகுதி அமைப்பாளர் அலெக்சாண்டர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் சமது, மதிமுக பகுதி செயலாளர் ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.ராமகிருஷ்ணன், அறிவழகி பாலகிருஷ்ணன், சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மீ.வே.கர்ணாகரன், புழல் ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை.வீரமணி, செங்குன்றம் பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் புழல் என்.நாராயணன், மேனகா நித்யானந்தம், குறிஞ்சி எஸ்.கணேசன், பகுதி செயலாளர்கள் என்.பரந்தாமன் (மாதவரம் வடக்கு), ஜி.துக்காராம் (மாதவரம் தெற்கு), தி.மு. தனியரசு (திருவொற்றியூர் கிழக்கு), கே.பி. சங்கர் (திருவொற்றியூர் மேற்கு), மாதவரம் வெங்கடேசன், மணலி கீர்த்தி மற்றும் திமுக, தோழமை கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ், நண்பன் – அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777