பொன்னேரியில், ஜூன் மாதம் கொரோனாவால் இறந்தவருக்கு, இன்று வரை வாரிசு சான்றிதழ் கிடைக்காதற்க்கு யார், காரணம்…
1 min read
பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (58) இவர் அப்பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், பல தலைமுறையாக அதே கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும் ஆவார். இவர் தனது நிலங்களையும், சொந்த வீட்டையும் விற்று தனது இரண்டு மகன்களையும் படிக்க வைத்துள்ளார். தற்போது வாடைகை வீட்டில் வசிக்கும் அவர்,

சிறந்த சமூக ஆர்வலர் ஆவார், அந்த கிராமத்தில் பலருக்கு குடும்ப அட்டையில் துவங்கி முதியோர் உதவி தொகை மற்றும் மின்சார பிரட்சனை, குடிநீர் பிரச்சினைகள் என எதுவாக இருந்தாலும், தன்னிடம் இருக்கும் ஒரு சிறிய போனில் அனைத்து துறை அதிகாரிகளிடமும் பேசி, பல காரியங்களை வென்றெடுக்க கூடியவர். இப்படி மக்கள் நலபணியில் ஈடுபடும் சூழ்நிலையில் தான், அனுப்பம்பட்டு கிராம நிர்வாக அலுவலராக உள்ள கோவர்தனத்திற்க்கும் இவருக்கும் சில மன கசப்புகள் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கொரோனா வின் பிடியில் சிக்கிய ஜெயசந்திரன் அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிர் இழந்தார். அதை தொடர்ந்து, அவருடைய மகன் விவேக் தனது தந்தையின் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். ஆனால் அனுப்பம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக உள்ள கோவர்தனன், இன்று வரை அந்த சான்றிதழ் ஜெயசந்திரனின் குடும்பத்தினர்களுக்கு கிடைக்க விடாமல் செய்வதாக கூறப்படுகிறது. அதனால் விரத்தி அடைந்த அவர் மனைவி, “ஊருக்கெல்லாம் ஓடி, ஓடி உழைத்த, என் கணவருக்கு, ஒரு வாரிசு சான்றிதழ் கிடைக்கவிடாமல் செய்யும் இந்த கிராம நிர்வாக அதிகாரியை, ஏன் என கேட்க, அதிகாரிகளே இல்லையா…” என, கூறி புலம்பி வருகிறார்.

G.பாலகிருஷ்ணன் – 8939476777